இந்திய கிரிக்கெட்டில் அதிக சம்பளம் வாங்குவது யார்?

இந்திய கிரிக்கெட்டில் அதிக சம்பளம் வாங்குவது யார் தெரியுமா என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

Update: 2018-09-11 06:00 GMT
மும்பை

இந்திய கிரிக்கெட் அணியின் சம்பள விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் சம்பள விவரமும் அடக்கமாகும். இதில் எல்லோரும் வியக்கும் வகையில் கோலி, அஸ்வின், ரோகித் சர்மா போன்ற முன்னணி வீரர்களை விட பயிற்சியாளர் ரவி சாஸ்திரி அதிக சம்பளம் வாங்குவது தெரியவந்துள்ளது

ரவி சாஸ்திரி - 18.07.2018 முதல் 17.10.2018 வரை மூன்று மாதம் இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க 2.05 கோடி முன்தொகையாக பெற்றுள்ளார்

விராட் கோலி - தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடர் - 65.06 லட்சம், ஒருநாள் தொடர் - 30.70 லட்சம், ஐசிசி தரவரிசை பரிசு - 29.27 லட்சம்.

ரோஹித் சர்மா - தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடர் - 56.96 லட்சம், ஒருநாள் தொடர் - 30.70 லட்சம், இலங்கை நிதாஸ் தொடர் - 25.13 லட்சம், ஐசிசி தரவரிசை பரிசு - 29.27 லட்சம்

அஸ்வின் - ஒப்பந்த தொகை அக்டோபர் முதல் டிசம்பர் 2017 வரை - 92.37 லட்சம், ஒப்பந்த தொகை ஜனவரி முதல் மார்ச் 2018 வரை - 1.01 கோடி, தென்னாபிரிக்கா டெஸ்ட் தொடர் - 52.70 லட்சம், ஐசிசி தரவரிசை பரிசு - 29.27 லட்சம்.

தினேஷ் கார்த்திக் - ஒப்பந்த தொகை அக்டோபர் முதல் டிசம்பர் 2017 வரை - 60.75 லட்சம், ஒப்பந்த தொகை ஜனவரி முதல் மார்ச் 2018 வரை - 53.42 லட்சம்

மேலே சில வீரர்கள் பட்டியல் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. மற்ற வீரர்களுக்கும் இதை ஒட்டியே சம்பளம் அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்