கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்: மெக்ராத்தை முந்தினார், ஆண்டர்சன்

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் இலங்கையின் முரளிதரன் (800 விக்கெட்), ஆஸ்திரேலியாவின் வார்னே (708 விக்கெட்), இந்தியாவின் கும்பிளே (619 விக்கெட்) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில் இலங்கையின் முரளிதரன் (800 விக்கெட்), ஆஸ்திரேலியாவின் வார்னே (708 விக்கெட்), இந்தியாவின் கும்பிளே (619 விக்கெட்) ஆகியோர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர். இவர்கள் மூவரும் சுழற்பந்து வீச்சாளர்கள். ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் 563 விக்கெட்டுகளுடன் (124 டெஸ்டில்) இந்த வரிசையில் 4–வது இடத்தில் இருந்தார். இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் 2–வது இன்னிங்சில் நேற்று முன்தினம் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் மெக்ராத்தின் சாதனையை சமன் செய்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், நேற்று முகமது ‌ஷமியின் விக்கெட்டை வீழ்த்தியவுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மெக்ராத்தை பின்னுக்கு தள்ளி விட்டு 4–வது இடத்துக்கு முன்னேறினார். ஆண்டர்சன் 143 டெஸ்டில் விளையாடி 564 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். அத்துடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையையும் மெக்ராத்திடம் இருந்து தட்டி பறித்தார்.