கிரிக்கெட்
டெஸ்ட் கிரிக்கெட்: பும்ராவின் ஆசை

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் செயல்படுவது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தனது ஆசையை தெரிவித்துள்ளார்.
மும்பை,

சமீபத்தில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்த இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா நேற்று அளித்த பேட்டியில், ‘என்னை பொறுத்தவரை டெஸ்ட் கிரிக்கெட் மிகவும் முக்கியமான ஒன்று. டெஸ்ட் போட்டியில் விளையாடி முத்திரை பதிக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பியது உண்டு. 20 ஓவர், ஒரு நாள் போட்டி பவுலராக மட்டும் இருக்க வேண்டும் என்று விரும்பியதில்லை. முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி உள்ளேன். அதே போல் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. டெஸ்ட் பயணத்தை இப்போது தான் தொடங்கி இருக்கிறேன். அதாவது வெறும் 12 டெஸ்டுகளில் தான் (62 விக்கெட்) விளையாடி இருக்கிறேன். முதல்முறையாக தென்ஆப்பிரிக்க மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் கால்பதித்த அன்றைய தினம், எனது கனவு நனவான மறக்க முடியாத தருணமாகும். அடுத்து இந்திய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் (தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக) விளையாட உள்ளேன். இந்தியாவில் டெஸ்டில் ஆடுவது வித்தியாசமான சவாலாக இருக்கும். அதை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன்.’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்