ஐ.பி.எல்.: புள்ளி பட்டியலில் அணிகளின் நிலை என்ன தெரியுமா?

நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 8 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன

Update: 2024-03-28 00:20 GMT

சென்னை,

17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 8 லீக் ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன.

அதில் 2 ஆட்டங்களில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ள நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தில் உள்ளது. மற்ற அணிகளில் சில தலா 1 வெற்றி பெற்ற நிலையில் ரன்ரேட் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. லக்னோ அணி புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

புள்ளி பட்டியல் விவரம் பின்வருமாறு:-

1. சென்னை சூப்பர் கிங்ஸ் - 4 புள்ளிகள் - 1.979 ரன்ரேட்

2. ராஜஸ்தான் ராயல்ஸ் - 2 புள்ளிகள் - 1.000 ரன்ரேட்

3. சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 2 புள்ளிகள் - 0.675 ரன்ரேட்

4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 2 புள்ளிகள் - 0.200 ரன்ரேட்

5. பஞ்சாப் கிங்ஸ் - 2 புள்ளிகள் - 0.025 ரன்ரேட்

6. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 2 புள்ளிகள் - -0.180 ரன்ரேட்

7. குஜராத் டைட்டன்ஸ் - 2 புள்ளிகள் - -1.425 ரன்ரேட்

8. டெல்லி கேப்பிடல்ஸ் - 0 புள்ளிகள் - -0.455 ரன்ரேட்

9.மும்பை இந்தியன்ஸ் -0 புள்ளிகள் - -0.925 ரன்ரேட்

10.லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 0 புள்ளிகள் - -1.000 ரன்ரேட்

 

 

Tags:    

மேலும் செய்திகள்