கால்பந்து
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு முன்னாள் செயலாளர் மறைவு

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏஐஎப்எப்) முன்னாள் செயலாளர் பி.பி.லட்சுமணன் (83) திங்கள்கிழமை காலமானார்.

கேரள மாநில கால்பந்து சங்கத் தலைவராக பதவி வகித்த லட்சுமணன், அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு செயலாளராகவும் இருந்தார். மேலும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் பிஃபிபா முறையீட்டு குழு உறுப்பினராகவும் பதவி வகித்தார் அவருக்கு மனைவி, 4 மகள்கள், 1 மகன் உள்ளனர். அவரது மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.