கால்பந்து
உலககோப்பை கால்பந்து: பிரபல விளையாட்டு வீரர்களின் மாஸ்க் உடனடியாக விற்றுத்தீர்ந்தது

உலகக்கோப்பை ரசிகர்களுக்காக விளையாட்டு வீரர்களின் மாஸ்க் தயாரிக்கப்பட்டு உடனடியாக விற்றுத்தீர்ந்தது.
2018-ம் ஆண்டு உலகக்கோப்பை ரஷியாவில் அடுத்த மாதம் தொடங்க உள்ளது. இந்த போட்டி ஜூன் மாதம் 14-ம் தேதி தொடங்கி ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியில் பிரான்ஸ், ஜெர்மனி, அர்ஜென்டினா, போர்ச்சுக்கல் உள்பட 32 அணிகள் அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.

தென் அமெரிக்காவில் கால்பந்து போட்டி மிகவும் பிரபலமானது.  அர்ஜென்டினா, பிரேசில், சிலி, மெக்சிகோ நாட்டில் கால்பந்து முக்கியமான விளையாட்டு.மெக்சிகோவில் இருந்து ரஷியாவிற்கு ஏராளமான ரசிகர்கள் கால்பந்து போட்டியை காண நேரில் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அப்போது ரசிகர்கள் தங்களுக்கு பிடித்தமான வீரர்களின் மாஸ்க்-ஐ அணிந்து கொண்டு போட்டியை ரசிப்பார்கள். இதனை பயன்படுத்தி ரசிகர்களுக்கு விற்பனை செய்ய மெக்சிகோ தொழிற்சலைகள் ஒன்று மெஸ்சி, நெய்மர் போன்றவர்களின் மாஸ்க்-ஐ தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மெஸ்சி, ரொனால்டோ ஆகியோரின் மாஸ்க் இதுவரை 1000-க்கும் மேல் தயாரித்து  உடனடியாக விற்றுத் தீர்ந்ததாக அந்த தொழிற்சாலை கூறியுள்ளது.