கால்பந்து
4-நாடுகளுக்கு இடையே நடந்த கால்பந்து போட்டியில் “இந்திய ஜீனியா்” அணி சாம்பியன்

நான்கு நாடுகளுக்கு இடையே நடந்த கால்பந்து போட்டியில் “இந்திய ஜீனியா்” அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. #Football #IndiaU-16
புதுடெல்லி,

சொ்பியாவில் நடைப்பெற்ற கால்பந்து போட்டியில் நான்கு நாடுகள் மோதின. இந்த போட்டியில் 16 வயதிற்குட்பட்ட இந்திய வீரா்கள் கலந்து கொண்ட சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

முதல் போட்டியில் ஜோர்டானை எதிர்கொண்ட இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முதல் வெற்றி பதிவு செய்தது. இதனை தொடா்ந்து சொ்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி எந்த கோல் அடிக்காமல் ஆட்டத்தை “டிரா”வில் முடித்தது.

இந்நிலையில் கடைசி போட்டியில் தஜிகிஸ்தானை அணியை எதிர்க்கொண்ட இந்திய அணி வீரர்கள் முதலில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தனா். பின்னா், எதிர்கொண்ட 5வது நிமிடத்தில் கிப்சன் முதல் கோல் அடித்து ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார். பின்னா் ஆட்டத்தின் முடிவில் 4-2 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி கோப்பையை தன் வசமாகினார்கள் இந்திய இளவீரா்கள்.