உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணிக்கு தலைமை தாங்குகிறார் நெய்மர்

ரஷ்யாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியில் பிரேசில் அணிக்கு நெய்மர் தலைமை தாங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. #NeymerHeadTeam

Update: 2018-05-15 06:33 GMT
ரியோடி ஜெனீரோ, 

உலக கோப்பை கால்பந்து போட்டி ஜூன் 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை ரஷ்யாவில் நடக்கிறது. இந்த உலக கோப்பையில் பிரேசில் முன்னணி வீரர் டேனி ஆல்வ்ஸ் காயம் காரணமாக விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாரீஸ் செயன்ட் ஜெர்மைன் கிளப்புக்காக ஆடிய போது கால்முட்டியில் காயமடைந்த டேனி ஆல்வ்ஸ் உலக கோப்பை போட்டிக்குள் குணமடைய வாய்ப்பில்லாததால் இந்த அறிவிப்பு வெளியாகியது.

மேலும் கடந்த சில மாதங்களாக காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த நெய்மர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாட தயாராகி வந்தார். இந்நிலையில் உலகக் கோப்பை போட்டியில் பிரேசில் அணிக்காக விளையாடும் கால்பந்து அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதில் 23 வீரர்கள் அடங்கிய   பிரேசில் அணியில் நெய்மர் தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டது. காயம் காரணமாக அணியிலிருந்து விலகிய டேனி ஆல்வ்ஸிற்கு பதிலாக டானிலோ அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில் பாரிஸில் நேற்று நடந்த விழாவில் சிறந்த பிரெஞ்சு கால்பந்து வீரருக்கான விருது பிரேசில் கால்பந்து வீரரான நெய்மருக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்