கால்பந்து
இத்தாலி கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர்

இத்தாலி கால்பந்து அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.
மிலன்,

இத்தாலி கால்பந்து அணி 1958-ம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறவில்லை. தகுதி சுற்று தோல்வி எதிரொலியாக அந்த அணியின் பயிற்சியாளர் ஜியன் பியரோ வெந்துரா அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த நிலையில் இத்தாலி அணியின் புதிய பயிற்சியாளராக ராபர்ட்டோ மான்சினி நேற்று நியமிக்கப்பட்டார். 53 வயதான ராபர்ட்டோ மான்சினி இத்தாலி கால்பந்து அணியின் முன்னாள் வீரர் ஆவார்.