கால்பந்து
கால்பந்து: 5-ஆவது முறையாக 'கோல்டன் ஷூ' வென்றார் மெஸ்ஸி

சிறந்த கால்பந்து வீரருக்கான கோல்டன் ஷூ விருதை 5-வது முறையாக வென்றார் மெஸ்ஸி.
ஸ்பெயின்,

2018-ம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரருக்கான ஜரோப்பிய 'கோல்டன் ஷூ' (தங்கக் காலணி) விருதை கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி வென்றார்.

உலகின் தலைசிறந்த நட்சத்திர கால்பந்து வீரர்களில் ஒருவராக அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி திகழ்ந்து வருகிறார். மேலும் இந்த விருதை 5-வது முறையாக வென்று சாதனைப் படைத்துள்ளார். முன்னதாக, 2010, 2012, 2013 மற்றும் 2017 ஆகிய ஆண்டுகளில் இவ்விருதை வென்றுள்ளார். இதன்மூலம் போர்ச்சுகல் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனையை (4 முறை) முந்தினார்.

பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வரும் லயோனல் மெஸ்ஸி, இந்த 2017-2018 சீசனில் 34 கோல்களுடன் 68 தனிநபர் புள்ளிகளைப் பெற்று இச்சாதனையைப் படைத்துள்ளார். மேலும் சமீபத்தில் நடைபெற்ற லா லீகா கால்பந்து தொடரிலும் அதிக கோல்களை அடித்த வீரராகத் திகழ்கிறார்.