கால்பந்து
உலக கோப்பை கால்பந்து: ஸ்பெயின், குரோஷிய அணிகள் அறிவிப்பு

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் அடுத்த மாதம் (ஜூன்) 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடக்கிறது.
ஜாக்ரெப்,

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் அடுத்த மாதம் (ஜூன்) 14-ந்தேதி முதல் ஜூலை 15-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான 24 பேர் கொண்ட குரோஷிய அணியை பயிற்சியாளர் ஜட்கோ டாலிச் நேற்று அறிவித்தார். லூக்கா மோட்ரிச், இவான் ராகிடிச், மரியோ மான்ட்ஜூகிச், இவான் பெரிசிச் போன்ற முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இதே போல் ஸ்பெயின் அணி வீரர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நட்சத்திர வீரர்கள் இனியஸ்டா, டேவிட் சில்வா, செர்ஜியோ ரமோஸ், ஜோர்டி ஆல்பா, ஜெரார்டு பிக்யூ உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர். அதே சமயம் தகுதி சுற்றில் விளையாடிய ஆல்வரோ மோரட்டா மற்றும் மார்கஸ் அலோன்சோ நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் சாம்பியனான ஸ்பெயின் அணி, போர்ச்சுகல், மொராக்கோ, ஈரான் ஆகிய அணிகளுடன் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது.

இதற்கிடையே உலககோப்பை போட்டிக்கான பெல்ஜியம் அணியில் இடம் கிடைக்காத விரக்தியில் அந்த அணியின் நடுகள வீரர் 30 வயதான ராட்ஜா நையிங்கோலன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.