கால்பந்து
ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார், ஜிடேன்

பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஜினேடின் ஜிடேன், ஸ்பெயினை சேர்ந்த பிரபல கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார்.
மாட்ரிட், 

பிரான்ஸ் கால்பந்து அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான ஜினேடின் ஜிடேன், ஸ்பெயினை சேர்ந்த பிரபல கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வந்தார். அவரது பயிற்சியில் ரியல் மாட்ரிட் அணி, ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தொடர்ச்சியாக 3 முறை சாம்பியன் பட்டம் வென்று சமீபத்தில் சாதனை படைத்தது. இந்த நிலையில் ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவதாக 45 வயதான ஜிடேன் நேற்று அறிவித்தார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில், ‘அடுத்த ஆண்டு ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக தொடரவில்லை என்று முடிவு எடுத்து இருக்கிறேன். ரியல் மாட்ரிட் தொடர்ச்சியாக வெற்றி பெற தகுதியான அணியாகும்’ என்று தெரிவித்தார்.