கால்பந்து
4 நாடுகள் கால்பந்து போட்டி: தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி

4 நாடுகள் கால்பந்து போட்டியின் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
மும்பை,

இந்தியா, கென்யா, சீனதைபே, நியூசிலாந்து ஆகிய 4 நாடுகள் இடையிலான கால்பந்து போட்டி மும்பையில் நேற்று தொடங்கியது. இதன் தொடக்க ஆட்டத்தில் இந்திய அணி 5-0 என்ற கோல் கணக்கில் சீன தைபே அணியை தோற்கடித்தது. இந்திய அணி தரப்பில் கேப்டன் சுனில் சேத்ரி 14-வது, 34-வது, 62-வது நிமிடங்களில் கோல் அடித்து ஹாட்ரிக் சாதனை படைத்தார். மற்ற இந்திய வீரர்களான உதான்டா சிங் 48-வது நிமிடத்திலும், பிரனாய் ஹால்டெர் 78-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். சீன தைபே அணியால் கடைசி வரை பதில் கோல் திருப்ப முடியவில்லை.