உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான மெக்சிகோ அணி வீரர்கள் விருந்து நிகழ்ச்சியில் அழகிகள் கலந்து கொண்டதால் சர்ச்சை

ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மெக்சிகோ அணி ‘எப்’ பிரிவில் இடம் பிடித்துள்ளது.

Update: 2018-06-06 20:30 GMT

மெக்சிகோ சிட்டி,

ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மெக்சிகோ அணி ‘எப்’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. அந்த பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, சுவீடன், தென்கொரியா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. உலக கோப்பை போட்டிக்காக ரஷியாவுக்கு புறப்படும் முன்பு மெக்சிகோ அணியினருக்கான வழியனுப்பு விழா மெக்சிகோ சிட்டியில் நடந்தது. இந்த விருந்து நிகழ்ச்சியில் சுமார் 30 விபசார அழகிகள் கலந்து கொண்டது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. மெக்சிகோ வீரர்கள், அழகிகளுடன் கும்மாளம் அடித்த சம்பவம் அந்த நாட்டு பத்திரிகைகளில் செய்தியாக வெளியாகி உள்ளது. இது குறித்து மெக்சிகோ கால்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் குல்லெர்மோ கான்ட்விடம் கேட்ட போது, ‘வீரர்கள் யாருக்கும் தண்டனை அளிக்கப்படாது. ஏனெனில் வீரர்கள் யாரும் பயிற்சியை தவிர்க்கவில்லை. ஓய்வு நேரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் வீரர்கள் பங்கேற்பதில் தவறு இல்லை’ என்று பதிலளித்தார். மெக்சிகோ அணி வீரர்கள் அழகிகள் சர்ச்சையில் சிக்குவது இது முதல்முறையல்ல.

மேலும் செய்திகள்