கால்பந்து
கால்பந்து தரவரிசையில் 70–வது இடத்துக்கு சரிந்தது, ரஷியா

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முன்பாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
மாஸ்கோ, உலக கோப்பை கால்பந்து போட்டிக்கு முன்பாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் முதல் 7 இடங்களில் மாற்றம் இல்லை. உலக சாம்பியன் ஜெர்மனி முதலிடத்திலும், பிரேசில் 2–வது இடத்திலும், பெல்ஜியம் 3–வது இடத்திலும, போர்ச்சுகல் 4–வது இடத்திலும், அர்ஜென்டினா 5–வது இடத்திலும் தொடருகிறது.ஆஸ்திரியாவுக்கு எதிரான நட்புறவு போட்டியில் 0–1 என்ற கணக்கில் தோல்வி அடைந்த உலக கோப்பை போட்டியை நடத்தும் ரஷியாவுக்கு தரவரிசையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அந்த அணி 4 இடங்கள் சரிந்து 70–வது இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த உலக கோப்பையில் களம் காணும் 32 அணிகளில் ரஷியாவே தரவரிசையில் பின்தங்கிய அணியாகும். இதற்கு அடுத்து சவுதி அரேபியா 67–வது இடத்தில் இருக்கிறது.