கால்பந்து
கண்டங்களுக்கான கால்பந்து: சீனதைபேயை வீழ்த்தி இறுதிப்போட்டியை எட்டியது கென்யா

கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து தொடர் மும்பையில் நடந்து வருகிறது.
மும்பை, கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து தொடர் மும்பையில் நடந்து வருகிறது. 4 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்றிரவு நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் கென்யா அணி 4–0 என்ற கோல் கணக்கில் சீனதைபேயை வீழ்த்தியது. அந்த அணியில் ஒடியம்போ (52–வது நிமிடம்), ஜாக்கின்ஸ் அதுடோ (55 மற்றும் 88–வது நிமிடம்), ஒட்டியானோ (70–வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர். லீக் முடிவில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து ஆகிய அணிகள் தலா 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் சமநிலை வகித்தது. இதையடுத்து கோல் வித்தியாசம் அடிப்படையில் முதல் இரு இடங்களை பிடித்த இந்தியா, கென்யா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. இந்திய அணி லீக்கில் ஏற்கனவே கென்யாவை 3–0 என்ற கோல் கணக்கில் சாய்த்து இருந்தது குறிப்பிடத்தக்கது.