ரஷிய அணிக்கு 2-வது வெற்றி கிட்டுமா?

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள போட்டியை நடத்தும் ரஷிய அணி, தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை தோற்கடித்து சிறப்பான தொடக்கம் கண்டது.

Update: 2018-06-18 21:45 GMT
செயின்ட் பீட்டர்ஸ்பர்க், 

உலக கோப்பை கால்பந்து போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள போட்டியை நடத்தும் ரஷிய அணி, தனது முதலாவது லீக் ஆட்டத்தில் 5-0 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியாவை தோற்கடித்து சிறப்பான தொடக்கம் கண்டது. இந்த நிலையில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு நடைபெறும் தனது 2-வது லீக் ஆட்டத்தில் ரஷிய அணி, எகிப்து அணியை எதிர்கொள்கிறது. எகிப்து அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் 0-1 என்ற கோல் கணக்கில் வலுவான உருகுவே அணியிடம் போராடி தோல்வி கண்டது. தோள்பட்டை காயம் குணமடையாததால் முதல் ஆட்டத்தில் எகிப்து அணியின் நட்சத்திர வீரர் முகமது சலா விளையாடவில்லை. ரஷியாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில், முழு உடல் தகுதி பெற்று விட்டதால் முகமது சலா விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் ரசிகர்களின் பலத்துடன் ஆடும் ரஷியாவுக்கு, எகிப்து அணி எல்லா வகையிலும் சவாலாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

முன்னதாக இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் கொலம்பியா-ஜப்பான், போலந்து-செனகல் அணிகள் சந்திக்கின்றன.

மேலும் செய்திகள்