உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்றைய ஆட்டங்கள்

இன்று நடக்கும் ஒவ்வொரு ஆட்டங்களையும் ஏறக்குறைய வாழ்வா–சாவா மோதல் என்று வர்ணிப்பதே சரியாக இருக்கும்.

Update: 2018-06-19 21:00 GMT

இன்று நடக்கும் ஒவ்வொரு ஆட்டங்களையும் ஏறக்குறைய வாழ்வா–சாவா மோதல் என்று வர்ணிப்பதே சரியாக இருக்கும்.

*ஸ்பெயினுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 3–3 என்ற கணக்கில் ‘டிரா’ செய்த போர்ச்சுகல் அணி இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும். ஆப்பிரிக்க தேசமான மொராக்கோ சற்று பலவீனமானது என்பதால் போர்ச்சுகல் அணி வெற்றி பெற பிரகாசமான வாய்ப்பு உள்ளது. முந்தைய ஆட்டத்தில் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து பிரமிக்க வைத்த போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

*இரண்டு முறை உலக சாம்பியனான உருகுவே அணி தனது முதல் லீக்கில் 1–0 என்ற கோல் கணக்கில் எகிப்தை வீழ்த்தியிருந்தது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் 2–வது சுற்றை நெருங்கிவிடலாம். உருகுவேயின் நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரசுக்கு இது 100–வது சர்வதேச போட்டி என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அதே சமயம் முதல் ஆட்டத்தில் 0–5 என்ற கோல் கணக்கில் ரஷியாவிடம் உதைவாங்கிய ஆசிய அணியான சவுதிஅரேபியா பலம் வாய்ந்த உருகுவேயை சமாளிப்பது கடினமே. உலக கோப்பை போட்டியில் சவுதிஅரேபியா அணி வெற்றி பெற்று 24 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது நினைவு கூரத்தக்கது.

*முதல் ஆட்டத்தில் ‘டிரா’ கண்ட முன்னாள் உலக, ஐரோப்பிய சாம்பியனான ஸ்பெயின் அணி கஜன் நகரில் இன்று இரவு நடக்கும் ஈரானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிக்கனியை பறிக்க வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறது. இதில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும். அதனால் இந்த முறை மிகுந்த எச்சரிக்கையுடன் ஆடுவார்கள். அதே சமயம் வெற்றியுடன் (மெராக்கோவுக்கு எதிராக) இந்த உலக கோப்பையை ஆரம்பித்த ஈரான் அணி இன்றைய ஆட்டத்தில் வாகை சூடினால் 2–வது சுற்றை கிட்டத்தட்ட உறுதி செய்து விடலாம். ஆனால் உலக கோப்பை போட்டியில் ஈரான் அணி ஐரோப்பிய அணிகளை வீழ்த்தியதாக (6–ல் விளையாடி 5 தோல்வி, ஒரு டிரா) வரலாறு கிடையாது. ஈரானுக்கு திடீர் பின்னடைவாக அந்த அணியின் பின்கள வீரர் ரோவ்ஸ்பே செஷ்மி தசைப்பிடிப்பு காரணமாக எஞ்சிய போட்டிகளில் ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்