உலக கோப்பை கால்பந்து: மொராக்கோவுக்கு எதிரான ஆட்டத்தில் போர்ச்சுகல் வெற்றி

உலக கோப்பை கால்பந்து போட்டி தொடரின் இன்றைய ”பி” பிரிவு ஆட்டத்தில் மொராக்கோ அணியை போர்ச்சுக்கல் வீழ்த்தியது.

Update: 2018-06-20 14:12 GMT
மாஸ்கோ,

உலக கோப்பை கால்பந்து போட்டியில் மாஸ்கோ நகரில் நடைபெற்ற ”பி” பிரிவு ஆட்டத்தில்  போர்ச்சுக்கல் -மொராக்கோ அணிகள் மோதின. போர்ச்சுக்கல் அணி, ஸ்பெயின் அணிக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் 3-3 என்ற கணக்கில் டிரா செய்தது. ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோ ஹாட்ரிக் கோல்கள் அடித்து ரசிகர்களை பரவசப்படுத்தினார். மறுமுனையில், ஈரானுக்கு எதிரான தனது முதல் போட்டியில் மொராக்கோ அணி தோல்வி அடைந்த இருந்தது. 

இந்த நிலையில், போர்ச்சுக்கல்- மொராக்கோ ஆகிய இரு அணிகளும் இன்று மோதின. ஆட்டத்தின் துவக்கத்திலேயே நட்சத்திர வீரர் ரொனால்டோ ஒரு கோல் அடித்து அசத்தினார். கடைசி வரை இரு அணிகளும் மேற்கொண்டு ஒரு கோலும் அடிக்காததால், ஆட்டத்தின் முடிவில் போர்ச்சுக்கல் அணி 1-0 என்ற கணக்கில், தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. 

மேலும் செய்திகள்