கால்பந்து
போட்டியை நேரில் பார்த்த ரசிகர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது

போட்டியை நேரில் கண்டுகளித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்கோ, உலக கோப்பை கால்பந்து போட்டியில் 21 ஆட்டங்கள் நிறைவில் (டென்மார்க்–ஆஸ்திரேலியா ஆட்டம் வரை) போட்டியை நேரில் கண்டுகளித்தவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆட்டத்தையும் காண ஸ்டேடியத்திற்கு 97 சதவீத ரசிகர்கள் வருகை தருவதாகவும், உலகம் முழுவதும் இதுவரை 26 லட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டு இருப்பதாகவும், இறுதிப்போட்டி நடக்கும் ஜூலை 15–ந்தேதி வரை டிக்கெட் விற்பனை நடைபெறும் என்றும் ‘பிபா’ கூறியுள்ளது.