கால்பந்து
இங்கிலாந்து வீரரின் ஆட்டத்தை காண ரூ.1½ கோடி செலவு செய்யும் மனைவி

இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் ஓய்வு இடைவேளையில் தங்களது குடும்பத்தினரை சந்திக்க அந்த அணியின் பயிற்சியாளர் காரெத் சவுத்கேட் அனுமதி அளித்துள்ளார்.
மாஸ்கோ, இங்கிலாந்து கால்பந்து வீரர்கள் ஓய்வு இடைவேளையில் தங்களது குடும்பத்தினரை சந்திக்க அந்த அணியின் பயிற்சியாளர் காரெத் சவுத்கேட் அனுமதி அளித்துள்ளார்.இங்கிலாந்து முன்னணி வீரர் ஜாமி வார்டின் மனைவி ரெபிகா, உலக கோப்பை போட்டியில் கணவரின் ஆட்டத்தை நேரில் பார்த்து உற்சாகப்படுத்துவதற்காக 4 குழந்தைகளுடன் தனிவிமானத்தில் ரஷியாவுக்கு வந்துள்ளார். அவர் தங்கியுள்ள நட்சத்திர ஓட்டலின் தினசரி வாடகை ரூ.22,500 ஆகும். மேலும் தனது குடும்பத்தினரின் பாதுகாப்பு பணியை கவனிக்கும் ஊழியர்களுக்கு தினமும் ரூ.90 ஆயிரம் சம்பளமாக வழங்குகிறார். 12 நாட்கள் ரஷியாவில் தங்கும் அவர் ஏறக்குறைய ரூ.1½ கோடிவரை செலவிடுவார் என்று தெரிகிறது.