கால்பந்து
பெண் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்து கொண்ட கால்பந்து ரசிகர்

நேரலையின் போது பெண் பத்திரிகையாளரிடம் கால்பந்து ரசிகர் ஒருவர் தவறாக நடந்து கொண்டார்.
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் குறித்து தொலைக்காட்சியில் நேரலை அளித்து கொண்டிருந்த பெண் பத்திரிகையாளரிடம் ஒருவர் தவறாக நடந்து கொண்டுள்ளார். ரசிகர் அந்த பெண் பத்திரிகையாளருக்கு நிக்ழ்ச்சியின் நேரலையின் போது முத்தம் கொடுத்து உள்ளார்.

கொலம்பியா நாட்டைச் சேர்ந்த ஜூலியத் கொன்ஸலெஸ் தெரன், மாஸ்கோவில் உள்ள டி டயிள்யூ எஸ்பனால் தொலைக்காட்சியில் பணிபுரிகிறார். உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் குறித்து நேரலையில் பேசிக் கொண்டிருந்த அவரிடம் தவறாக நடந்து அவர் கன்னத்தில் முத்தமிட்டுள்ளார்.

இருப்பினும் தொடர்ந்து நேரலையில் பேசிக் கொண்டிருந்த அவர், இச்சம்பவம் குறித்து இணையத்தில் பேசியுள்ளார்.

இதனை தொடர்ந்து விளையாட்டு ரசிகர்கள் தரும் துன்புறுத்தல்கள் குறித்து அப்பெண் பத்திரிகையாளர் பேசியுள்ளார்.