உலக கோப்பையில் அதிக வயதில் களம் இறங்கி எகிப்து வீரர் சாதனை

உலக கோப்பை கால்பந்து போட்டியில் அதிக வயதில் களம் இறங்கி எகிப்து வீரர் சாதனை படைத்துள்ளார்.

Update: 2018-06-25 22:45 GMT
ரஷ்யா,

உலக கோப்பை கால்பந்து தொடரில் சவுதிஅரேபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் எகிப்து அணியில் மூத்த கோல் கீப்பர் எஸ்சாம் எல்-ஹடாரி களம் இறங்கினார். முதல் இரு ஆட்டங்களில் வெளியே உட்கார வைக்கப்பட்ட ஹடாரிக்கு இது தான் உலக கோப்பையில் முதல் ஆட்டமாகும்.

இதன் மூலம் உலக கோப்பை வரலாற்றில் அதிக வயதில் கால்பதித்தவர் என்ற சாதனைக்கு அவர் சொந்தக்காரர் ஆனார். அவரது வயது 45 ஆண்டு, 161 நாட்கள். இதற்கு முன்பு கொலம்பியாவின் பார்டி மோன்ட்ராகன் 2014-ம் ஆண்டு உலக கோப்பையில் ஜப்பானுக்கு எதிராக தனது 43-வது வயதில் (43 ஆண்டு, 3 நாள்) ஆடியதே மூத்த வீரரின் சாதனையாக இருந்தது.

மேலும் செய்திகள்