கால்பந்து
உலகக்கோப்பை கால்பந்து: ஐஸ்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் குரோஷியா வெற்றி

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஐஸ்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் குரோஷியா வெற்றிபெற்றது. #FIFAWOrldCup2018
ரஷியா,

21-வது உலக கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் இன்று நான்கு லீக் போட்டிகள் நடைபெற்றது.

முதல் லீக் ஆட்டத்தில் பெரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

இரண்டாவது லீக் ஆட்டத்தில் டென்மார்க், பிரான்ஸ் அணிகள் இடையிலான போட்டி சமனில் முடிந்தது.

மூன்றாவது லீக் ஆட்டத்தில் நைஜீரியா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா வீழ்த்தியது.

இந்நிலையில் நான்காவது லீக் ஆட்டத்தில்  ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள ஐஸ்லாந்து, குரோஷியா அணிகள் பலப்பரிட்சை நடத்தின. ஏற்கனவே 2-வது சுற்றை உறுதி செய்து விட்ட பலம் வாய்ந்த குரோஷியா அணி, கடைசி லீக்கில் ஐஸ்லாந்துடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் போடுவதற்கு எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போனது. இதனால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் இரு அணிகள் சார்பில் எந்த கோலும் பதிவாகவில்லை. அடுத்து தொடங்கிய இரண்டாவது பாதி ஆட்டத்தில் குரோஷியா அணி சார்பில் மில்லன் பேடல்ஜே 1 கோல் அடித்தார். அவரைத் தொடர்ந்து ஐஸ்லாந்து அணியின் சார்பில் சிகுரோசன் 1 கோலை பதிவு செய்தார். ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் குரோஷியா அணி வீரர் இவான் பெரிசிக் 1 கோல் அடித்து அணியை முன்னிலை பெற செய்தார். இதன்மூலம் ஐஸ்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் குரோஷியா வெற்றிபெற்றது.