கால்பந்து
உலக கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்று முடிவில் இருந்து சில புள்ளி விவரங்கள்

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்று முடிவில் இருந்து சில புள்ளி விவரங்களை இங்கு காண்போம்.
ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை  கால்பந்து தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள், ஜூன் 28ஆம் தேதியுடன் முடிவடைந்தன. இந்த சுற்றின் முடிவில் நாக்-அவுட் சுற்றுக்கு 16 அணிகள் தகுதி பெற்றன. இந்நிலையில், லீக் சுற்றில் அடிக்கப்பட்ட கோல்கள், பெனால்டி ஷாட்டுகள் குறித்து காண்போம்.

* மொத்த லீக் ஆட்டங்கள் - 48
* அடிக்கப்பட்ட கோல்கள் - 122
* சுயகோல்கள் - 9( 88 ஆண்டு கால உலக கோப்பை போட்டி வரலாற்றில் மொத்தம் 50 சுய கோல்கள் அடிக்கப்பட்டுள்ளன) இதற்கு முன்பு 1998-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் 6 சுய கோல்கள் விழுந்ததே ஒரு போட்டி தொடரில் அதிகபட்சமாக இருந்தது.
* பெனால்டி வாய்ப்புகள் - 24
* மஞ்சள் அட்டை - 158 முறை
* சிவப்பு அட்டை பெற்றவர்கள் - 3
* அதிக கோல்கள் அடித்த வீரர் - இங்கிலாந்தின் ஹாரி கேன் (5 கோல்கள்)
* அதிக முறை கோலுக்கு முயற்சி செய்த வீரர் - பிரேசிலின் நெய்மார் (17 ஷாட்டுகள்)
* ஹாட்ரிக் கோல் அடித்த வீரர்கள் - ரொனால்டோ(போர்த்துகல்), ஹாரி கேன்(இங்கிலாந்து)
* இந்த உலக கோப்பை போட்டியில் எல்லா அணிகளும் குறைந்தபட்சம் 2 மற்றும் அதற்கு மேலான கோல்கள் அடித்து இருக்கின்றன. இதன் மூலம் ஒரு உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற எல்லா அணிகளும் குறைந்தபட்சம் 2 கோல்கள் அடித்து இருப்பது இதுவே முதல் முறையாகும்.
* பனாமாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் துனிசியா அணி வீரர் பென் யூசெப் முதல் பதில் கோலை திருப்பினார். உலக கோப்பை போட்டி வரலாற்றில் பதிவான 2,500-வது கோல் இதுவாகும்.