குரோஷியாவுக்கு அதிர்ச்சி அளிக்குமா ரஷியா?

உலக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 11.30 மணிக்கு சோச்சி நகரில் நடக்கும் கடைசி கால்இறுதியில் போட்டியை நடத்தும் ரஷியாவும், குரோஷியாவும் மோதுகின்றன.

Update: 2018-07-06 21:45 GMT
லக கோப்பை கால்பந்து போட்டியில் இன்று இரவு 11.30 மணிக்கு சோச்சி நகரில் நடக்கும் கடைசி கால்இறுதியில் போட்டியை நடத்தும் ரஷியாவும், குரோஷியாவும் மோதுகின்றன.

இந்த உலக கோப்பை தொடரில், தரவரிசையில் பின்தங்கிய அணியான (70-வது இடம்) ரஷியாவின் எழுச்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. குறிப்பாக 2-வது சுற்றில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயினை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் வெளியேற்றி மிரட்டியது. இதில் கோல் கீப்பர் இகோர் அகின்பீவ் ஹீரோவாக ஜொலித்தார். உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் விளையாடி வரும் ரஷிய அணி மீண்டும் ஆதிக்கம் செலுத்துவதை எதிர்நோக்கி உள்ளது. டெனிஸ் செரிஷிவ், ஆர்டெம் டிஸ்யூபா ஆகியோர் தலா 3 கோல்கள் அடித்து நட்சத்திர வீரர்களாக திகழ்கிறார்கள்.

லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் (அர்ஜென்டினா, நைஜீரியா, ஐஸ்லாந்துக்கு எதிராக) வெற்றி கண்டு பட்டையை கிளப்பிய லூக்கா மோட்ரிச் தலைமையிலான குரோஷிய அணி 2-வது சுற்றில் பெனால்டி ஷூட்-அவுட்டில் டென்மார்க்கை பதம் பார்த்தது. ஆக்ரோஷ போக்கை கடைபிடிக்கும் குரோஷியா அதே வேகத்தை ரஷியாவிடமும் காட்டுவதற்கு தயாராக உள்ளது. இந்த ஆட்டத்தில் குரோஷியா வெற்றி பெற்றால் 1998-ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக அரைஇறுதியில் அடியெடுத்து வைக்கும்.

மேலும் செய்திகள்