கால்பந்து
ஆஸ்திரேலிய கால்பந்து வீரர் டிம் காஹில் ஓய்வு

ஆஸ்திரேலிய மூத்த வீரர் டிம் காஹில், சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
சிட்னி, ஆஸ்திரேலிய மூத்த வீரர் டிம் காஹில், சர்வதேச கால்பந்து போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தார். சமீபத்தில் நடந்த உலக கோப்பை கால்பந்து போட்டியில் பெருவுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டும் மாற்று ஆட்டக்காரராக களம் காணும் வாய்ப்பு பெற்றார். அந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 0–2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது. இது அவர் பங்கேற்ற 4–வது உலக கோப்பை தொடராகும். ஆஸ்திரேலிய அணிக்காக அதிக ஆட்டங்களில் விளையாடிய பெருமைக்குரிய 38 வயதான காஹில் 107 ஆட்டங்களில் 50 கோல்கள் அடித்துள்ளார்.