கோட்டிஃப் கோப்பை 2018: 20 வயதுக்குட்பட்டோர் இந்திய அணி பங்கேற்பு

கோட்டிஃப் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக 20 வயதுக்குட்பட்டோர் இந்திய அணி ஸ்பெயின் சென்றுள்ளது. #CotifCup2018

Update: 2018-07-21 02:37 GMT
புதுடெல்லி,

ஸ்பெயினில்  20 வயதுக்குட்பட்டோர் சர்வதேச கோட்டிஃப் கால்பந்து போட்டியில் நடைபெற உள்ளன.

இதில் பங்கேற்பதற்காக 25 பேர் கொண்ட இந்திய அணி ஸ்பெயின் சென்றுள்ளது. இந்த அணியில் பிபா 17 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பையில் பங்கேற்றவர்கள் மற்றும் 19 வயதுக்குட்பட்ட தேசிய அணியில் இடம் பெற்றவர்கள் ஆகியோர் அடங்குவர்.

தலைமைப் பயிற்சியாளாராக பிளாய்ட் பிண்டோ செயல்பட்டு வருகிறார். இதில் மிட்பீல்டர் ஹர்மன்பிரீத் சிங், ஜஷன்தீப் சிங் ஆகியோரும் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் ஜீலை 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை உள்ளூர் கிளப் அணிகளுடன் பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி பங்கேற்க உள்ளது.

இந்தப்போட்டியில் இந்தியா அணி, வரும் ஜீலை 29ம் தேதி முர்சியா அணியையும், 31ம் தேதி மெளரிடனியா அணியையும், ஆகஸ்ட் 3ம் தேதி வெனிசுலா அணியையும், 5ம் தேதி அர்ஜென்டீனா அணியையும் எதிர்கொள்கிறது.

ஸ்பெயினில் நடக்க உள்ள போட்டிகளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பதாக தேசிய அணியின் பயிற்சியாளர் அபிஷேக் யாதவ் தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு தயாராகி வரும் பிரபலமான கால்பந்து அணிகளுடன் இந்திய அணியின் பங்கேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்