கால்பந்து
மெக்சிகோ கிளப் அணியின் பயிற்சியாளராக மரடோனா நியமனம்

மெக்சிகோ கிளப் அணியின் பயிற்சியாளராக மரடோனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பயிற்சியாளருமான 57 வயதான டியாகோ மரடோனா, மெக்சிகோவில் உள்ள 2-வது டிவிசன் லீக் போட்டியில் விளையாடும் டோராடோஸ் கிளப் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். டோராடோஸ் கிளப் தலைவர் இன்ஜூன்சா கூறுகையில், ‘பயிற்சி அளிப்பது தொடர்பாக மரடோனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். அப்பணியை செய்வதற்கு ஆர்வமுடன் இருப்பதாக அவர் கூறினார். நான் நினைத்ததை விட பேச்சுவார்த்தை சுலபமாக முடிந்தது.’ என்றார்.