கால்பந்து
நட்புறவு கால்பந்து போட்டியில் அமெரிக்காவை வீழ்த்தியது பிரேசில்

நட்புறவு கால்பந்து போட்டியில் அமெரிக்காவை, பிரேசில் அணி வீழ்த்தியது.
நியூஜெர்சி,

பிரேசில் - அமெரிக்கா அணிகள் இடையே நட்புறவு சர்வதேச கால்பந்து போட்டி நேற்று முன்தினம் இரவு நியூஜெர்சி நகரில் நடந்தது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பிரேசில் 2-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது. அமெரிக்காவுக்கு எதிராக பிரேசில் தொடர்ச்சியாக பதிவு செய்த 11-வது வெற்றி இதுவாகும். பிரேசில் அணியில் 11-வது நிமிடத்தில் ராபர்ட்டோ பிர்மினோவும், 43-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பில் நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மாரும் கோல் அடித்தனர். சர்வதேச போட்டியில் நெய்மாரின் 58-வது கோல் இதுவாகும். உலக கோப்பை போட்டியில் கால்இறுதியுடன் வெளியேறிய பிரேசில் அணி அதன் பிறகு ஆடிய முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.