ஹாக்கி
இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக ஹரேந்திர சிங் நியமனம்

இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஹரேந்திர சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி மிகவும் மோசமாக விளையாடியது. கடந்த 12 ஆண்டுகளாக இந்திய அணி காமன்வெல்த் போட்டியில் பதக்கம் பெறாமல் திரும்பியதில்லை. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து இன்று நடைபெற்ற ஹாக்கி சங்க கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஹரேந்திர சிங் 2016-ம் ஆண்டு இந்திய ஜூனியர் ஹாக்கி அணி உலகக்கோப்பை பெற காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.