ஹாக்கி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி; இந்திய பெண்கள் அணி அறிவிப்பு

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டிகளுக்காக இந்திய பெண்கள் அணி அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி,

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஆக்கி போட்டி தென்கொரியாவில் வருகிற 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடக்கிறது. இதில் இந்தியா, சீனா, தென்கொரியா, ஜப்பான், மலேசியா ஆகிய அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். இந்திய அணி 13-ந் தேதி ஜப்பானையும், 16-ந் தேதி சீனாவையும், 17-ந் தேதி மலேசியாவையும், 19-ந் தேதி தென்கொரியாவையும் எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய பெண்கள் ஆக்கி அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் ராணிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக சுனிதா லக்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய பெண்கள் அணி வருமாறு:-

கோல்கீப்பர்கள்: சவிதா, ஸ்வாதி, பின்களம்: தீபிகா, சுனிதா லக்ரா (கேப்டன்), தீப் கிரேஸ் எக்கா, குர்ஜித் கவுர், சுமன் தேவி, நடுகளம்: மோனிகா, நமிதா, நிக்கி பிரதான், நேகா கோயல், லிலிமா மின்ஸ், நவ்ஜோத் கவுர், உதிதா, முன்களம்: வந்தனா கட்டாரியா, லால்ரெம்சியாமி, நவ்னீத் கவுர், அனுபமா பார்லா.