மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி: முதல் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தியது இந்தியா

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டியின் முதல் ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபாரம் #AsianChampionsTrophy

Update: 2018-05-14 05:24 GMT
டோங்கே

5-வது ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டிகள் தென்கொரியாவின் டோங்கே  நகரில் நடந்து வருகிறது. தொடக்க ஆட்டத்தில் ஜப்பான்  அணியை இந்திய மகளிர் சந்தித்தது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே  இந்தியா தனது ஆதிக்கத்தை செலுத்தியது. ஜப்பான் அணியின் தற்காப்பை பலமுறை இந்திய வீராங்கனைகள் தகர்த்தனர்.

இளம் முன்கள வீராங்கனையான நவ்நீத் கெளர் 7, 25, 55-வது நிமிடங்களில் ஹாட்ரிக் கோலடித்து அசத்தினார். ராணி ராம்பால் இல்லாத நிலையிலும் இந்திய மகளிர் அணி திறமையாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் அணிக்கும் தொடர்ச்சியாக 2 பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தும் அதை கோலாக்க முடியவில்லை. 58-வது நிமிடத்தில் ஜப்பானின் அகி யமடா ஒரு கோல் அடித்தது ஆறுதலாக இருந்தது. ,முடிவில் இந்திய மகளிர் அணி 4-1 என்ற கோல் கணக்கில், வெற்றி பெற்றது.

வரும் 16-ஆம் தேதி அடுத்த ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது இந்தியா.

உலகின் 12ம் இடத்தில் உள்ள ஜப்பான் கடந்த 2013ம் ஆண்டு சாம்பியன் கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வென்றிருந்தது. எனினும் கடந்த 2016ம் ஆண்டு சீனாவை வீழ்த்தி இந்தியா பட்டம் வென்றது.

மேலும் செய்திகள்