ஹாக்கி
மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரில், மலேசியாவை வீழ்த்தி இந்திய அணி, இறுதிக்கு முன்னேறியது.
டோங்கே சிட்டி:

தென் கொரியாவில், மகளிருக்கான 5-வது சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி  நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' இந்தியா, ஜப்பான், சீனா, மலேசியா மற்றும் தென் கொரியா என, 5 அணிகள் பங்கேற்கின்றன.

இதில் ஜப்பான் (4-1), சீனாவை (3-1) வென்ற இந்திய அணி, இன்று தனது மூன்றாவது போட்டியில் மலேசியாவை சந்தித்தது. இதில் 3-2 என, கோல் கணக்கில் வென்றது இந்திய அணி. இதையடுத்து 3 போட்டியில், 9 புள்ளிகள் பெற்ற இந்திய அணி, இறுதி போட்டிக்கு  முன்னேறி உள்ளது