ஹாக்கி
தேசிய ஹாக்கி முகாம்: 9 வீரர்கள் தேர்வு

தேசிய ஹாக்கி பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக 9 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராஞ்சி,

தேசிய ஹாக்கி பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 9 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெற உள்ள ஜூனியர் தேசிய முகாமில் பங்கேற்பதற்காக இந்த 9 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் 3 ஆண்கள் மற்றும் 6 பெண்கள் அடங்குவர். இவர்கள் அனைவரும் 18 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

இதன்படி, மகளிர் தேசிய முகாம் ஜூன் 9-ந் தேதி முதல் ஜூலை 10-ந் தேதி வரை போபாலில் நடைபெறும். ஆடவர்களுக்கான போட்டிகள் ஜூன் 6-ந் தேதி முதல் ஜூலை 9-ந் தேதி வரை மகாராஷ்டிராவின் ஔரங்காபாத்தில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமிற்கு நாடு முழுவதும் இருந்து 44 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த 44 பேரில் 33 பேர் கொண்ட ஒரு முக்கிய குழுவை ஹாக்கி இந்தியா உருவாக்கும்.