ஸ்பெயினுக்கு எதிரான பெண்கள் ஆக்கி: இந்திய அணி முதல் வெற்றி

ஸ்பெயினுக்கு எதிரான பெண்கள் ஆக்கி போட்டியில் இந்திய அணி முதல் வெற்றியை ருசித்தது.

Update: 2018-06-16 22:00 GMT
மாட்ரிட்,

இந்திய பெண்கள் ஆக்கி அணி, ஸ்பெயினில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 0-3 என்ற கோல் கணக்கில் தோல்வி கண்டது. 2-வது ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இந்த நிலையில் இந்தியா-ஸ்பெயின் அணிகள் இடையிலான 3-வது ஆட்டம் மாட்ரிட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் 3-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி ஸ்பெயின் அணி வீராங்கனை மரியா லோபெஸ் முதல் கோல் அடித்தார்.

28-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்திய அணி வீராங்கனை குர்ஜித் கவுர் பதில் கோல் திருப்பினார். 32-வது நிமிடத்தில் இந்திய அணி வீராங்கனை லால்ரெம்சியாமி கோல் அடித்து முன்னிலை பெற்று கொடுத்தார். 58-வது நிமிடத்தில் ஸ்பெயின் அணி வீராங்கனை லோலா ரிரா பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கோலடித்து சமநிலையை ஏற்படுத்தினார். 59-வது நிமிடத்தில் இந்திய அணி கேப்டன் ராணி கோல் அடித்தார். அதன் பிறகு இரு அணியினராலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. முடிவில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது.

மேலும் செய்திகள்