ஹாக்கி
ஸ்பெயினுக்கு எதிரான ஆக்கி: இந்திய பெண்கள் அணி தோல்வி

ஸ்பெயினுக்கு எதிரான ஆக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வியடைந்தது.
மாட்ரிட்,

இந்திய பெண்கள் ஆக்கி அணி, ஸ்பெயினில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட போட்டி தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று நடந்த 4-வது ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ஸ்பெயின் 4-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது. ஸ்பெயின் அணியில் லோலா ரீரா (10, 34-வது நிமிடம்), லூசியா ஜிமென்ஸ் (19-வது நிமிடம்), கர்மென் கனோ (37-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர். இந்திய அணியில் உதித்தா (22-வது நிமிடம்) ஆறுதல் கோல் போட்டார். இதன் மூலம் தொடரில் ஸ்பெயின் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல் ஆட்டத்தில் ஸ்பெயினும், 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. 2-வது ஆட்டம் டிரா ஆனது. கடைசி போட்டி இன்று நடக்கிறது.