ஹாக்கி
உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி இந்திய அணி அறிவிப்பு

உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியில் பங்கேற்கும் 18 வீராங்கனைகள் கொண்ட இந்திய ஹாக்கி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி

உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி லண்டனில்  வரும் ஜூலை மாதம் 21-ஆம் தேதி  தொடங்க உள்ளது.

உலகக் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டியின் பி பிரிவில் இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து அணிகளுடன் இந்திய அணியும் இடம் பெற்றுள்ளது.

இதற்கான அணியை ஹாக்கி இந்தியா நேற்று அறிவித்துள்ளது. இதில், மூத்த வீராங்கனை ராணி ராம்பால் கேப்டனாகவும், கோல்கீப்பர் சவிதா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அணி விவரம் வருமாறு:-

ரஜனி எடிமர்பு, சுனிதா லக்ரா, தீப் கிரேஸ் எக்கா, தீபிகா, குர்ஜித்கெளர், ரீனா கோக்கர், நமீதா டொப்போ, லிலிமா மின்ஸ், மோனிகா, நேஹா கோயல், நவ்ஜோத் கெளர், நிக்கி பிரதான், வந்தனா கட்டாரியா, நவ்நீத் கெளர், லால்ரேமிசியாமி, உதிதா.