ஹாக்கி
பெண்கள் உலக கோப்பை ஆக்கி: நெதர்லாந்து மீண்டும் ‘சாம்பியன்’

14–வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்தது.
லண்டன், 14–வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான நெதர்லாந்து அணி 6–0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை பந்தாடி பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. நெதர்லாந்து அணி, உலக கோப்பையை உச்சிமுகர்வது இது 8–வது முறையாகும். முன்னதாக 3–வது இடத்துக்கான ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 3–1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை சாய்த்தது.