ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இன்று தொடக்கம்

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்கும், ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இன்று தொடங்க உள்ளது.

Update: 2018-10-17 23:00 GMT
மஸ்கட்,

5-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆண்கள் ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் இன்று (வியாழக்கிழமை) முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, மலேசியா, பாகிஸ்தான், தென்கொரியா, ஜப்பான், ஓமன் ஆகிய 6 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும். தொடக்க நாளான இன்று நடைபெறும் ஆட்டங்களில் மலேசியா-ஜப்பான் (இரவு 8.25 மணி), இந்தியா-ஓமன் (இரவு 10.40 மணி) அணிகள் மோதுகின்றன. இந்திய அணி மன்பிரீத் சிங் தலைமையில் களம் காணுகிறது. இந்த போட்டித்தொடரை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்-2 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்