பிற விளையாட்டு
உலக பேட்மிண்டன் தரவரிசையில் சாய்னா முன்னேற்றம்

உலக பேட்மிண்டன் தரவரிசையில் சாய்னா முன்னேறி உள்ளார்.

உலக பேட்மிண்டன் வீரர்-வீராங்கனைகளின் தரவரிசைபட்டியலை சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி பெண்கள் ஒற்றையர் பிரிவு தரவரிசையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 2 இடங்கள் முன்னேறி 10-வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 3-வது இடத்தில் நீடிக்கிறார். ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஸ்ரீகாந்த் 2 இடம் ஏற்றம் கண்டு 3-வது இடத்தையும், பிரனாய் 2 இடம் முன்னேறி 8-வது இடத்தையும் தன்வசப்படுத்தி இருக்கிறார்கள்.