ஆசிய கராத்தே போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு ஊக்கத்தொகை கராத்தே தியாகராஜன் அறிவிப்பு

17–வது ஆசிய கேடட் ஜூனியர் மற்றும் 21 வயதுக்குட்பட்டோருக்கான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானில் நடந்தது.

Update: 2018-05-12 21:00 GMT

சென்னை, 

17–வது ஆசிய கேடட் ஜூனியர் மற்றும் 21 வயதுக்குட்பட்டோருக்கான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பானில் நடந்தது. இதில் கட்டா ஜூனியர் பெண்கள் பிரிவில் வந்தனா, கார்ஜி சிங், சலோனி ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப்பதக்கமும், இதன் ஜூனியர் ஆண்கள் பிரிவில் அஜிங்யா மோஜி, யாஷ் பன்சால், ஹிரித்திக் ஆகியோர் கொண்ட இந்திய அணி வெண்கலப்பதக்கமும் கைப்பற்றியது. இரு குழுவினரும் மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.

வெள்ளிப்பதக்கம் வென்ற பெண்கள் அணிக்கு ரூ.1 லட்சமும், வெண்கலம் வென்ற ஆண்கள் அணிக்கு ரூ.50 ஆயிரமும் ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று இந்திய கராத்தே சங்க தலைவர் கராத்தே ஆர்.தியாகராஜன் அறிவித்துள்ளார். இதே போல் தனிநபர் கேடட் குமிதே பிரிவில் வெண்கலம் பெற்ற இந்திய வீராங்கனை அரியானாவைச் சேர்ந்த சுருதி ‌ஷர்மாவுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. பதக்கம் வென்றவர்களை பொதுச் செயலாளர் பரத் ‌ஷர்மாவும் பாராட்டினார்.

மேலும் செய்திகள்