ஆசிய போட்டிகளின் முடிவில் வாலிபால் லீக் போட்டிகள் நடத்தப்படும்; இந்திய வாலிபால் கூட்டமைப்பு அறிவிப்பு

ஆசிய போட்டிகளின் முடிவில் வாலிபால் லீக் போட்டிகள் நடத்தப்படும் என இந்திய வாலிபால் கூட்டமைப்பு இன்று தெரிவித்துள்ளது. #VolleyballLeague

Update: 2018-05-14 16:22 GMT

மும்பை,

ஆசிய விளையாட்டு போட்டிகள் ஆகஸ்டு மாதத்தில் இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெறுகிறது.  இந்த போட்டிகள் நிறைவடைந்த பின் வாலிபால் லீக் போட்டிகளை நடத்த இந்திய வாலிபால் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

இந்திய வாலிபால் கூட்டமைப்பு, பேஸ்லைன் வெஞ்சூர்ஸ் உடன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், லீக் போட்டிகளுக்கான அணிகளை தேர்வு செய்யும் நடைமுறை தொடங்கியுள்ளது என தெரிவித்துள்ளது.

இதுபற்றி புரோ வாலிபால் லீக் தலைமை செயல் அதிகாரி ஜாய் கூறும்பொழுது, முதல் சீசனில், இந்திய வாலிபால் போட்டியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் அணி உரிமையாளர்களை நாங்கள் தேடி வருகிறோம்.  தகுதியான அளவீடுகளின்படி 6 அணிகள் தேர்வு செய்யப்படும் என கூறினார்.

நாட்டில், ஒன்று வட இந்தியாவிலும் மற்றொன்று தென்னிந்தியாவிலும் என இரு நகரங்களில் லீக் போட்டிகள் நடைபெறும்.  இரு உள்ளரங்கங்களில் 18 போட்டிகள் நடைபெறும்.

வீரர்களுக்கான ஏலம் ஜூலையில் நடைபெறும்.  90 இந்திய வீரர்களில் இருந்து அணி உரிமையாளர்கள் தங்களது அணிக்கு வேண்டியவர்களை தேர்வு செய்து கொள்ளலாம்.  டிராப்ட் முறையில் வெளிநாட்டு வீரர்களும் அணியில் சேர்க்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்