பிற விளையாட்டு
கோடைகால கைப்பந்து பயிற்சி முகாம் நிறைவு

நெல்லை பிரண்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 36-வது கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது.
சென்னை, 

நெல்லை பிரண்ட்ஸ் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 36-வது கோடைகால இலவச கைப்பந்து பயிற்சி முகாம் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த ஒரு மாத காலமாக நடந்து வந்தது. முகாமில் 200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு முன்னாள் வீரர்கள் தினகரன், ஜெகதீசன், கேசவன் மற்றும் செல்வராஜ், ரமேஷ், பிரசன்னா வெங்கடேசன், தேவி ஆகியோர் பயிற்சி அளித்தனர்.

பயிற்சி முகாமின் நிறைவு விழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவிற்கு சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் அர்ஜூன்துரை தலைமை தாங்கினார். முகாம் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.சித்திரை பாண்டியன், மாவட்ட கைப்பந்து சங்க பொருளாளர் பழனியப்பன், ‘காஸ்கோ’ நிர்வாகி உபைதுர் ரகுமான் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழும், டி-சர்ட்டும் வழங்கப்பட்டது.