பிற விளையாட்டு
பார்முலா1 கார்பந்தயம்: ஆஸ்திரேலிய வீரர் ரிக்கார்டோ வெற்றி

பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 6–வது சுற்றான மொனாக்கோ கிராண்டபிரி பந்தயம் அங்குள்ள மான்ட்கார்லோ ஓடுதளத்தில் நேற்று நடந்தது.
மான்ட்கார்லோ, பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 21 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 6–வது சுற்றான மொனாக்கோ கிராண்டபிரி பந்தயம் அங்குள்ள மான்ட்கார்லோ ஓடுதளத்தில் நேற்று நடந்தது. 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் 260.286 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தனர். இதில் ஆஸ்திரேலியா வீரர் டேனியல் ரிக்கார்டோ (ரெட்புல் அணி) ஒரு மணி 42 நிமிடம் 54.807 வினாடிகளில் இலக்கை எட்டி வெற்றி பெற்று அதற்குரிய 25 புள்ளிகளை தட்டிச் சென்றார். முன்னாள் சாம்பியன் செபாஸ்டியன் வெட்டல் (ஜெர்மனி) 2–வதாகவும், நடப்பு சாம்பியன் லீவிஸ் ஹாமில்டன் (இங்கிலாந்து) 3–வதாகவும் வந்தனர்.6 சுற்று பந்தயம் முடிவில் ஹாமில்டன் 110 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார். 7–வது சுற்று போட்டி கனடாவில் ஜூன் 10–ந்தேதி நடக்கிறது.