ஆசிய விளையாட்டு போட்டியில் ஒருங்கிணைந்த கொரியா அணி பங்கேற்பு

ஆசிய விளையாட்டு போட்டியில் ஒருங்கிணைந்த கொரியா அணி பங்கேற்பு

Update: 2018-06-18 20:30 GMT
சமீபகாலமாக தென்கொரியா, வடகொரியா இடையே நிலவிய பகைமை மாறி நட்பு அதிகம் துளிர்த்து வருகிறது. தென்கொரியாவில் சில மாதங்களுக்கு முன்பு நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் ஐஸ் ஆக்கி போட்டியில் இரு கொரியா அணியினரும் இணைந்து ஒரே அணியாக கலந்து கொண்டனர். 

இந்த நிலையில் இந்தோனேஷியா தலைநகர் ஜகர்தாவில் ஆகஸ்டு 18-ந் தேதி முதல் செப்டம்பர் 2-ந் தேதி வரை நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டியில் தென்கொரியா மற்றும் வடகொரியாவினர் ஒரு சில போட்டிகளில் ஒரே அணியாக இணைந்து செயல்படவும், தொடக்க மற்றும் நிறைவு விழாவில் ஒன்றாக இணைந்து ‘கொரியா’ என்ற பெயரில் ஒரே கொடியுடன் அணிவகுப்பில் கலந்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர். 

இதனை இரு நாடுகளும் நேற்று கூட்டாக வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளன. அத்துடன் வரும் சர்வதேச போட்டிகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படவும், கூட்டாக பயிற்சிகள் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

மேலும் செய்திகள்