பிற விளையாட்டு
துளிகள்

மாநிலங்களுக்கு இடையிலான 58-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று தொடங்குகிறது.

* ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தில் நடந்த தேசிய சப்-ஜூனியர் வலுதூக்குதல் போட்டியில் சிறுவர்களுக்கான 83 கிலோ உடல் எடைப்பிரிவில் சென்னை வீரர் எஸ்.நவீன் ஸ்குவாட் (240 கிலோ), பெஞ்ச் பிரஸ் (125 கிலோ), டெட்லிப்ட் (225 கிலோ) ஆகிய மூன்று பிரிவுகளில் சேர்த்து மொத்தம் 590 கிலோ எடை தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

* மாநிலங்களுக்கு இடையிலான 58-வது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று தொடங்குகிறது. இதில் நாடு முழுவதும் இருந்து 700-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்தோனேஷியாவில் ஆகஸ்டு மாதம் நடக்கும் ஆசிய விளையாட்டுக்குரிய தகுதி சுற்றான இந்த போட்டியில் இருந்து இந்திய தடகள அணி தேர்வு செய்யப்படும் என்பதால் இந்த போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.