பிற விளையாட்டு
உலக கோப்பை வில்வித்தை: இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்றார்

உலக கோப்பை வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி தங்கம் வென்றார்.
சால்ட்லேக் சிட்டி,

உலக கோப்பை வில்வித்தை போட்டி (3-ம் நிலை) அமெரிக்காவின் சால்ட்லேக் சிட்டியில் நடந்தது. இதில் பெண்களுக்கான ரிகர்வ் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 7-3 என்ற புள்ளி கணக்கில் மிட்செலியை (ஜெர்மனி) தோற்கடித்து 6 ஆண்டுகளுக்கு பிறகு தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். கடைசியாக 2012-ம் ஆண்டு துருக்கியில் நடந்த உலக போட்டியில் வாகை சூடியிருந்தார். 4 முறை வெள்ளிப்பதக்கமும் வென்று இருக்கிறார்.

இந்த வெற்றியின் மூலம் துருக்கியில் இந்த ஆண்டு கடைசியில் நடைபெறும் உலக வில்வித்தை போட்டியின் இறுதி சுற்றுக்கு ஜார்கண்டை சேர்ந்த தீபிகா குமாரி தகுதி பெற்றுள்ளார். கவுரவமிக்க உலக கோப்பை இறுதி சுற்றில் தீபிகா பங்கேற்க இருப்பது இது 7-வது முறையாகும்.