பிற விளையாட்டு
து ளி க ள்

இந்திய அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் இன்று உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.

* மலேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-12, 21-16 என்ற நேர்செட்டில் ஹாங்காங் வீராங்கனை யிப் புய் யின்னை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

*நெதர்லாந்தில் நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் இன்று உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை (மாலை 6.30 மணி) சந்திக்கிறது. முதல் இரு ஆட்டங்களில் இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் அர்ஜென்டினாவை தோற்கடித்து இருந்தது.