பிற விளையாட்டு
சென்னை மாவட்ட ஜூனியர் தடகள போட்டி - 15-ந் தேதி தொடக்கம்

சென்னை மாவட்ட ஜூனியர் தடகள போட்டிகள் 15-ந் தேதி தொடங்க உள்ளது.
சென்னை,

சென்னை மாவட்ட தடகள சங்கம் சார்பில், மாவட்ட ஜூனியர் தடகள போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் வருகிற 15 மற்றும் 16-ந் தேதிகளில் நடக்கிறது. இதில் சுமார் 1,500 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இருந்து, சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் ஆகஸ்டு 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை நடைபெறும் மாவட்டங்களுக்கு இடையிலான 33-வது மாநில ஜூனியர் தடகள போட்டிக்கான சென்னை மாவட்ட அணி தேர்வு செய்யப்படும். இந்த தகவலை சென்னை மாவட்ட தடகள சங்க செயலாளர் சி.லதா தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்